விவசாய நிலத்தில் கிடந்த 12 அடி நீள மலைப்பாம்பு.. பயந்து ஓடிய பெண் !

 

விவசாய நிலத்தில் கிடந்த 12 அடி நீள மலைப்பாம்பு.. பயந்து ஓடிய பெண் !

சத்திரப்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வரும் கண்மணி என்ற பெண்ணுக்குச் சொந்தமாக 4 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை உள்ள சத்திரப்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வரும் கண்மணி என்ற பெண்ணுக்குச் சொந்தமாக 4 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் இடையே இருக்கும் வரப்பு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஒரு மலைப்பாம்பு புகுந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அது அன்றிலிருந்து வெளியே வரவில்லை என்பதால் மக்களை அதனை அப்படியே விட்டுவிட்டார்களாம் . இதனையடுத்து இன்று வழக்கம் போலக் கண்மணி வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது, வரப்பிற்கு அடியில் ஒளிந்து கொண்டிருந்த மலைப்பாம்பு திடீரென வெளியே வந்துள்ளது. 

ttn

அதனைக் கண்ட அந்த பெண் அலறியடித்துக் கொண்டு வயலிலிருந்து வீட்டுக்கு ஓடி, அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்துள்ளார். மேலும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், ஜே.சி.பி இயந்திரங்களை வைத்து சில மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அதனைப் பிடித்துள்ளனர். அதனையடுத்து அந்த பாம்பை  ஒன்னங்கரை காட்டுப் பகுதியில் தீயணைப்புத் துறையினர் விட்டுள்ளனர். விவசாய நிலத்துக்குள் மலைப்பாம்பு வந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.