விவசாயிகளோடு விவசாயியாய் சேற்றில் இறங்கி நாற்றுநட்ட எடப்பாடி பழனிசாமி!

 

விவசாயிகளோடு விவசாயியாய் சேற்றில் இறங்கி நாற்றுநட்ட எடப்பாடி பழனிசாமி!

திருவாரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுடன் சேர்ந்து வயலில் இறங்கி நாற்று நட்டார்.‌

திருவாரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுடன் சேர்ந்து வயலில் இறங்கி நாற்று நட்டார்.‌

டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, விவசாயிகள் சங்கங்கள் சார்பில் திருவாரூரில் பாராட்டு விழா நடைபெற்றது.  விழாவில் பங்கேற்க மாட்டு வண்டி ஓட்டிய படி மேடைக்கு வந்தார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி.

அதன்பின் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “விவசாயி யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. வர்ண பகவானுக்கு மட்டும் தான் பயப்பட வேண்டும். சட்டமன்றத்தில் நான் முதல்முறையாக பாதுக்காக்கபட்ட வேளாண் மண்டலம் என அறிவித்ததில் பெருமைப்படுகிறேன். விவசாயி முதல்வராக இருந்து சட்டமுன்வடிவை தாக்கல் செய்ததில் பெருமைப்படுகிறேன்.

Edappadi Palanisamy

எதற்கும் பயப்படாத மனிதர் விவசாயி மட்டும் தான். எவ்வளவோ குறை இருந்தாலும் மனநிறைவோடு வாழ்பவர் விவசாயி மட்டும் தான். எவ்வளவு செல்வம் இருந்தாலும் உணவு இல்லாமல் வாழ முடியாது. தமிழ்நாட்டில் நூற்றுக்கு 65 சதவீதம் பேர் விவசாயி அவர்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர் விவசாயிகள். இங்கிருக்கும் ஒவ்வொரு விவசாயியையும் நான் முதல்வராக பார்க்கிறேன். ஏனென்றால் நானும் ஒரு விவசாயி. உழவுத் தொழில் மிக கடுமையான தொழில். வியர்வையை இரத்தமாக்கி செய்யும் தொழில். அதிக கல்விகூடங்களை திறந்த அரசு. 

டெல்டா பகுதியில் இந்தாண்டு நல்ல விளைச்சல் இந்தாண்டு 7 லட்சம் ஏக்கர் கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 14.5.லட்சம் மெ. டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 12.5 லட்சம் மெ. டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கோதாவரி, காவிரி இணைப்பு திட்டம் தொடங்கிவிட்டது. ஆந்தரா தெலுங்கானாவிலிருந்து காவிரிக்கு தண்ணீர் கிடைக்கும். இதற்கான் பூர்வாங்க பணிகளை தொடங்கிவிட்டோம். காவிரி காப்பாளான் என்கிற பட்டம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கண்ணை இமை காப்பதை போல டெல்டாவை பாதுகாப்பேன்.

தமிழகத்தில் பெரும்பான்மையாக இருப்பது விவசாயிகள் தான். பெரும்பான்மையாக இருக்கும் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானத்தை பெருக்க வேண்டும். இவர் எப்படி ஆட்சி செய்வார் என எதிர்கட்சியினர் ஏளனம் செய்தனர். ஆனால் வெற்றிகரமாக 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்” என கூறினார்.