விவசாயிகளுக்கு 6000 ரூபாய் கொடுப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கும் திட்டத்தால் இடைத்தரகர்களுக்குத்தான் லாபம்! நடிகர் ராஜ்கிரண் தடாலடி.

 

விவசாயிகளுக்கு 6000 ரூபாய் கொடுப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கும் திட்டத்தால் இடைத்தரகர்களுக்குத்தான் லாபம்! நடிகர் ராஜ்கிரண் தடாலடி.

இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று சொல்லியிருந்த பிரதமர் மோடி, அதற்கான திட்டத்தை இன்று தொடங்கி வைத்திருக்கிறார்.

சென்னை: இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று சொல்லியிருந்த பிரதமர் மோடி, அதற்கான திட்டத்தை இன்று தொடங்கி வைத்திருக்கிறார். இதனால்,இந்தியாவில் உள்ள 12 கோடி விவசாயிகள் பலனடைவார்கள் என்று உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் நடந்த விழாவில் அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி.

மேலோட்டமாகப் பார்த்தல் இது விவசாயிகளுக்கு ஓரளவு நம்மை தரும் திட்டம்தான் என்றாலும் இதிலுள்ள நடைமுறை சிக்கல்களை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.இந்த திட்டத்தால் இடைத்தரகர்கள்தான் லாபம் பார்ப்பார்கள் என்று தனது முகநூல் பக்கத்தில் கவலை தெரிவித்திருக்கிறார் இயக்குனரும் நடிகருமான ராஜ்கிரண்.அவர் கேட்கும் கேள்விகள் கீழே…

‘மத்திய அரசு,ஏழை விவசாயிகளுக்காக,வருடத்திற்கு ஆறாயிரம் ரூபாய் வழங்க முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது.இந்த ஆறாயிரத்தை மூன்று தவணைகளாக,தவணைக்கு இரண்டாயிரமாக வழங்கவிருக்கிறது. பசி,பட்டினியால் வாடும் ஏழை விவசாயிகளுக்கு மாதம் ஐநூறு ரூபாய் கிடைப்பது,பொன் வைக்க வேண்டிய தேவையில் இருக்கும் அவர்களுக்கு, பூ வைத்த மாதிரி,நல்ல விசயம் தான்.

modi

ஆனால், இந்த பணத்தை,வங்கிகள் மூலமாக கொடுப்பது என்பது தான், கவலையை உண்டாக்குகிறது! ஏழை விவசாயிகள் அனைவருக்கும் வங்கிப்பரிவர்த்தனை பற்றிமுழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.எப்பொழுதும், ‘ஒரே மாதிரி கையெழுத்து’ போட வேண்டும்,கொஞ்சம் மாறினாலும்,வங்கிகள் பணம் கொடுக்காது.

எல்லாம் சரியாக இருந்தாலும்,குறைந்த அளவு பணம் கணக்கில் இருக்க வேண்டும் என்று ஒரு தொகையை வங்கிகள் பிடித்து வைத்துக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி,ஏழை விவசாயிகளிடம்,’வங்கியிலிருந்து நான் பணம்பெற்றுத்தருகிறேன்’ என்று ஒரு தரகர் கூட்டம் கிளம்பி விடும்.அவர்களுக்கும் அழுதது போக,ஏழையின் கையில் என்ன மிஞ்சும்!?
இதையெல்லாம் யோசித்து,அரசு கொடுக்கும் பணம் முழுவதுமாகசேர வேண்டியவர்களுக்கு போய்ச்சேர்வதற்காக,அரசு ஒரு நல்ல வழிகாட்டினால் ஏழை விவசாயிகளுக்கு பயனுள்ளதாகும்.”