விவசாயிகளுக்கான தட்கல் மின் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு அக்-1 முதல் விண்ணப்பிக்கலாம் – அமைச்சர் தங்கமணி

 

விவசாயிகளுக்கான தட்கல் மின் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு அக்-1 முதல் விண்ணப்பிக்கலாம் – அமைச்சர் தங்கமணி

விவசாயிகளுக்கான தட்கல் மின் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெறுவதற்கு வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்

விவசாயிகளுக்கான தட்கல் மின் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெறுவதற்கு வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

விவசாயத்துக்கு, தமிழக அரசு இலவசமாக மின்சாரம் வழங்குகிறது. விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து, 20 ஆண்டுகளுக்கு மேலாக, விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதற்கு தீர்வாக, விரைந்து மின் இணைப்பு பெறும் “தட்கல்’ திட்டத்தை, தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், ஐந்து எச்.பி., மின் மோட்டார்களுக்கு, 2.50 லட்சம் ரூபாய் செலுத்தினால், உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும். 7.5 எச்.பி., மின் மோட்டார்களுக்கு, 2.75 லட்சம் ரூபாய்; 10 எச்.பி., மின் மோட்டார்களுக்கு, மூன்று லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.தமிழகம் முழுவதும், 10 ஆயிரம் பேருக்கு உடனடி மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் இந்த ஆண்டு பயன்பெற விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Thanga mani

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய மின் துறை அமைச்சர் தங்கமணி, “தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுகளின் பார்களுக்கு வருகின்ற 30-ம் தேதி டெண்டர் விடப்படும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளும், பார்களும் படிப்படியாக குறைக்கப்படும். விவசாயிகள் தட்கல் முறையில் விவசாயத்திற்கு மின் இணைப்பு பெற அக்டோபர் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்” எனக் கூறினார்.