விவசாயிகளின் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தமிழக அரசு இயற்றிய புதிய சட்டம்.!

 

விவசாயிகளின் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தமிழக அரசு இயற்றிய புதிய சட்டம்.!

தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு தமிழக அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாக விளைச்சல் பாதிப்பினாலும் மழையின்மையின் காரணத்தினாலும் பயிர் சாகுபடி மற்றும் உணவு பொருட்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். எந்த காலத்திலும் இல்லாத வறுமை நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டுக்கே உணவு அளிக்கும் விவசாயிகளின் நிலை மோசமானதால், பல விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் இந்த பிரச்னைக்கு தீர்வு கொண்டு வர மத்திய அரசு பல சட்டங்களை இயற்றி வருகிறது. இருப்பினும், தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு தமிழக அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. 

 

Farmers

தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் என்னும் இச்சட்டத்தின் படி விவசாயிகளுடன், உற்பத்தி பொருட்களைக் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொள்ளும். விதைப்புக் காலத்திற்கு முன்னரே ஒப்பந்தத்தின் மூலம் விலையை நிர்ணயிப்பதால், விவசாயிகளுக்கு எந்த வித பண இழப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும், இதன் மூலம் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் எந்த இடைத்தரகர்களை இல்லாமல், நேரடியாக விவசாயிகளிடம் ஒப்பந்தம் மேற்கொள்வதால், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

Farmers

தமிழக அரசு இயற்றியுள்ள இந்த புதிய சட்டத்திற்கு, ஜனாதிபதி ராம் நாத சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்திற்கான சட்ட விதிகளை விரைவில் வகுத்து அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேளாண் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இச்சட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் நலன் காக்கப்படுவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.