விவசாயிகளிடம் அரசு ஏன் பேசவில்லை? மு.க.ஸ்டாலின் கேள்வி

 

விவசாயிகளிடம் அரசு ஏன் பேசவில்லை? மு.க.ஸ்டாலின் கேள்வி

உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளிடம் தமிழக அரசு பேசாதது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு: உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளிடம் தமிழக அரசு பேசாதது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கக்கூடாது என கூறி திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 17-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்தார்.

அதன் பிறகு அவர்கள் மத்தியில் பேசிய அவர்,உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறீர்கள். வெறும் போராட்டம் மட்டும் நடத்தினால் இந்த அரசு செவி சாய்க்காது என்று கருதி, குறிப்பிட்ட சிலர் தங்களை வருத்திக்கொள்ள கூடிய உண்ணா நோன்பையும் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதற்கு வேதனைப்படுகிறேன்.

உயர்மின் கோபுரங்களை அமைக்க யாரையும் கலந்து பேசாமல் சர்வாதிகார தன்மையுடன் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. உயர் அதிகாரிகளும் வந்து சந்திக்கவில்லை. மாவட்ட கலெக்டர் கூட வந்து சந்திக்க வில்லை என்று வேதனையுடன் போராட்டக்குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை நேரில் சந்தித்து பேசினேன். அவர்களையும் அரசு அழைத்து பேசவில்லை. அதே நிலைதான் விவசாயிகளுக்கும் உள்ளது என்றார்.