விவசாயம் என்றால் ஸ்டாலினுக்கு என்னவென்றே தெரியாது : எடப்பாடி பழனிசாமி தாக்கு !

 

விவசாயம் என்றால் ஸ்டாலினுக்கு என்னவென்றே தெரியாது : எடப்பாடி பழனிசாமி தாக்கு !

நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதே போல முதல்வர் ஏற்கனவே அறிவித்ததன் படி, ஜெயலலிதாவின் பிறந்தநாள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் விவசாயிகளைக் கொச்சைப்படுத்திப் பற்றிப் பேச வேண்டாம். அவருக்கு  விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது. அதிமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்ற ஸ்டாலினின் பிரச்சாரத்திற்கு விளக்கம் அளிக்கும் விதமாக அனைத்து நலத்திட்டங்களையும் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறோம்’ என்று கூறினார். 

ttn

அதனைத்தொடர்ந்து, ‘அதிமுக அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களில் ஏதாவது குறை இருந்தால் ஸ்டாலினை சொல்லச் சொல்லுங்கள். விவசாயி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நான் உதாரணமாகத் திகழ்கிறேன். தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் அதிமுக அரசு தான் பெற்றுத் தந்தது. அதிமுக அரசில் செயல்படுத்தப் படும் திட்டங்கள் அனைத்தும் காலத்தால் அழிக்க முடியாத திட்டங்கள்’ என்று கூறினார்