விழுப்புரம் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்.. சமூக விலகலை பின்பற்றாததால் பரபரப்பு!

 

விழுப்புரம் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்.. சமூக விலகலை பின்பற்றாததால் பரபரப்பு!

மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் சமூக விலகலை  பின்பற்றி கடைகளுக்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் சமூக விலகலை  பின்பற்றி கடைகளுக்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆங்காங்கே கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கடைகள், பெட்ரோல் பங்க், டாஸ்மாக் உள்ளிட்டவற்றுக்கு தமிழக அரசு நேரக்கட்டுப்பாடு விதித்தது. அதே போல ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தமிழக அரசின் அந்த விதிகள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.  

ttn

மக்கள் கூட்டத்தை தடுக்க அரசு பல  திட்டங்களை நடைமுறை படுத்திக் கொண்டே இருப்பினும், கொரோனா வைரஸின் அபாயத்தை உணராத மக்கள் அதனை முறையாக கடைபிடிப்பதில்லை. இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதல் விழுப்புரத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் கூட்டம் குவிந்துள்ளது. மார்க்கெட்டில் சமூக இடைவெளியை மக்கள் முறையாக பின்பற்றாமல் இருந்துள்ளனர். கொரோனா வைரஸால் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலையிலும், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வதாகவும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.