விழுப்புரம் சிறுமி கொலை விவகாரத்தில் நீதி கிடைக்குமா? – கனிமொழி கேள்வி

விழுப்புரம் சிறுமி கொலை விவகாரத்தில் நீதி கிடைக்குமா? – கனிமொழி கேள்வி

விழுப்புரத்தில் அ.தி.மு.க நிர்வாகிகளால் சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை விபத்து என்று தமிழக அரசு குறிப்பிட்டு வருவதைக் கனிமொழி எம்.பி கண்டித்துள்ளார். சிறுமிக்கு நீதி கிடைக்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் அ.தி.மு.க நிர்வாகிகள் இரண்டு பேர் முன்விரோதம் காரணமாக சிறுமி ஒருவரை எரித்து கொலை செய்தனர். தன்னை எரித்தது தொடர்பாக சிறுமி மரண வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த நிலையில், அந்த சம்பவத்தை விபத்து என்று தமிழக அரசு குறிப்பிட்டு வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

villupuram-girl-murder

தி.மு.க எம்.பி கனிமொழி இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், “விழுப்புரம் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியையும் உலுக்கியிருக்கிறது. ஆனால், ஆளும் அதிமுக அரசு அந்த கொடூர நிகழ்வை தீ விபத்து என்று குறிப்பிட்டு உண்மையை மறைக்கத் துடிக்கிறது. தருமபுரியில் 3 மாணவிகள் பேருந்தில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திலும் குற்றவாளிகளை காப்பாற்ற துடித்தவர்கள் தானே இவர்கள். விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்டதை, தீ விபத்து என பதிவு செய்து, பின்னர் எதிர்ப்பு எழுந்தவுடன் தீ வைக்கப்பட்டு என மாற்றும் அரசிடம் இருந்து, அந்த சிறுமிக்கான நீதியை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?” என்று கூறியுள்ளார்.