விழுப்புரத்தில் வாரத்துக்கு மூன்று நாட்கள் மட்டுமே மளிகைக்கடைகள் திறக்கப்படும்! – புதிய திட்டத்தால் மக்கள் திண்டாட்டம்

 

விழுப்புரத்தில் வாரத்துக்கு மூன்று நாட்கள் மட்டுமே மளிகைக்கடைகள் திறக்கப்படும்! – புதிய திட்டத்தால் மக்கள் திண்டாட்டம்

கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில், மளிகை, காய்கறி கடைகள் நாள் முழுக்க திறக்க அனுமதிக்கப்பட்டது. அப்போது கடைகளில் கூட்ட நெரிசல் இல்லை. ஆனால், மக்கள் எல்லா நேரமும் வெளியே சென்று வந்தனர். இதனால், கடைகள் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி என்று அறிவிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பைத் தவிர்க்க விழுப்பும் மாவட்டத்தில் வாரத்துக்கு நான்கு நாட்கள் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் உணவுப் பொருள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். 

villupuram

கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில், மளிகை, காய்கறி கடைகள் நாள் முழுக்க திறக்க அனுமதிக்கப்பட்டது. அப்போது கடைகளில் கூட்ட நெரிசல் இல்லை. ஆனால், மக்கள் எல்லா நேரமும் வெளியே சென்று வந்தனர். இதனால், கடைகள் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி என்று அறிவிக்கப்பட்டது. இதனால், எல்லா கடைகளிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதுவே கொரோனா பரவுதலுக்கு காரணமாக இருக்கும் என்று கூறி பல கடைகளுக்கு சீல் வேறு வைக்கப்பட்டது.

grocery-shop-78

தற்போது மக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க விழுப்பும் மாவட்டத்தில் வாரத்துக்கு நான்கு நாட்கள் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மூன்று நாட்கள் மட்டுமே கடைகள் திறக்கப்படும். அதுவும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திங்கள், புதன், சனிக் கிழமைகளில் மட்டுமே கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழன் என்பதால் மருந்து கடைகள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர். நாளை காலை கடைகள் திறக்கப்படும் என்பதால் பொருட்களை வாங்க அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.