விழித்திரு, விலகியிரு, வீட்டில் இரு! முதல்வர் பழனிசாமி உத்தரவு

 

விழித்திரு, விலகியிரு, வீட்டில் இரு! முதல்வர் பழனிசாமி உத்தரவு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்களிடம் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மக்களிடம் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன். கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு… விலகியிரு… வீட்டிலிரு…அரிசி, பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவாக உள்ளது. கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம். கொரோனா வைரஸ் ஒருவர் மூலம் நேரடியாகவோ, கைகள் மூலமாகவும் பரவுகிறது. கொரோனாவை தடுக்க அரசு போர்கால நடவடிக்கை எடுத்துவருகிறது. 

எடப்பாடி பழனிசாமி

அம்மா உணவகங்கள் மூலம் சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.  மக்கள் சுய மருத்துவம் செய்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் பொறுப்புள்ள குடிமக்களாக நடந்துகொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் 10 ஆயிரத்து 518 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளாது. கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு உதவித்தொகை வழங்கப்படும். ஏப்ரம் மாதத்துக்கான அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக அரசு ரூ.3850 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” தெரிவித்தார்.