விழாக்கோலம் பூண்ட தஞ்சை பெரிய கோவில்.. நகர் முழுவதிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

 

விழாக்கோலம் பூண்ட தஞ்சை பெரிய கோவில்.. நகர் முழுவதிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

23 ஆண்டுகளுக்குப் பிறகு உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவில் கோவிலின் குடமுழுக்கு விழா வரும் பிப்ரவரி 5  ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது.

23 ஆண்டுகளுக்குப் பிறகு உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவில் கோவிலின் குடமுழுக்கு விழா வரும் பிப்ரவரி 5  ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. தமிழ் முறையில் நடத்துவதா அல்லது சமஸ்கிருத முறையில் நடத்துவதா என்று பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், இக்கோவிலில் குடமுழுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது. இந்நிலையில் குடமுழுக்கு நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளதால் தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு விழாக் கோலமாகக் காட்சியளிக்கிறது. 

ttn

குடமுழுக்கு விழாவுக்காக காவிரி நதியின் புனித நீர் நேற்று யானை மேல் வைத்து ஊர்வலமாகக் கோவிலுக்குக் கொண்டு வரப்பட்டு பூர்வாங்க பூஜைகளும், யாக சாலை பூஜைகளும் தொடங்கியுள்ளன. இதற்காகக் அதனைக் காண ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டனர். யாக சாலை பூஜைகளைக் காணவே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தால், குட முழுக்கைக் காண வரும் மக்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும். பக்தர்களின் வசதிக்காக 275 இடங்களில் குடிநீர்த் தொட்டிகளும்,  238 கழிவறைகளும், 800 குப்பைத்தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

 

ttn

இன்று காலை தஞ்சை கோவிலில் 6ஆம் கால யாக சாலை பூஜையும், மாலை 7 ஆம் யாக சாலை பூஜையும் நடைபெற உள்ளதால் அதனைக் காண வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலில் எந்த வித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்கும் பொருட்டு, கோவிலைச் சுற்றி 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.