“விளையாடிய சிறுவனை களவாடிட்டு போய்ட்டிங்களே ..” -கடத்தல்காரர்களிடம் சிக்கிய சிறுவன் நிலை.

 

“விளையாடிய சிறுவனை களவாடிட்டு போய்ட்டிங்களே  ..” -கடத்தல்காரர்களிடம் சிக்கிய சிறுவன் நிலை.

சாலையில் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயதான சிறுவனை கடத்தி 30 லட்ச ரூபாய் கேட்டு தராததால் அந்த சிறுவனை கடத்தல் காரர்கள் கொன்று விட்டார்கள் .

“விளையாடிய சிறுவனை களவாடிட்டு போய்ட்டிங்களே  ..” -கடத்தல்காரர்களிடம் சிக்கிய சிறுவன் நிலை.

உத்திரப்பிரதேச மாநிலம்  அம்ரோஹாவில் நவுகாவன் சதாத்  பகுதியின் பில்னா கிராமத்தில் புதன்கிழமை மாலை தபீஷ் என்ற ஐந்து வயதான சிறுவன் அவரின் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தான் .அப்போது அந்த வீட்டு வாசலில் வந்த சிலர் ஒரு காரில் அந்த சிறுவனை திடீரென தூக்கி போட்டுகொண்டு கடத்தி சென்று விட்டார்கள் .அதனால் அந்த சிறுவன் காருக்குள்ளிருந்து அலறினான் .

உடனே அந்த கடத்தல் காரர்கள் அந்த சிறுவன் தபீஷின் சத்தம் வெளியே கேட்காமலிருக்க காரின் கண்ணாடிகளை மூடி விட்டார்கள் .

பின்னர் அந்த கடத்தில் காரர்கள் அந்த சிறுவனின் தந்தை மஹ்தாப்புக்கு போன் செய்து ,தங்களின் மகன்  உயிரோடு வேண்டுமென்றால் 30 லட்ச ரூபாய் பணம் வேண்டுமென்று கூறினார்கள்.அதை கேட்டு அதிர்ச்சியடைந்தார் அவரின் தந்தை  மஹ்தாப் ,மேலும் அந்த கடத்தல்காரர்கள் இது விஷயமாக போலீசிடம் சென்றால் தங்களின் மகனை கொன்று விடுவதாக மிரட்டினார்கள் .ஆனால் அந்த சிறுவனின் தந்தை மஹ்தாப் இது விஷயமாக போலீசில் புகாரளித்தார் .இதனால் போலீசார் அந்த சிறுவனையும் கடத்தல் காரர்களையும் தேடி வந்தார்கள் .இந்த விஷயம் அந்த கடத்தல் காரர்களுக்கு தெரிந்து விட்டது .அதனால் கோபமுற்ற அவர்கள் அந்த சிறுவனை கொன்று விட்டார்கள்

பிறகு அந்த சிறுவனைக் கொன்ற பிறகு, கடத்தல்காரர்கள் அவரது உடலை கிராம மசூதியின் கூரையில் உள்ள ஒரு மாடத்தில் மறைத்து வைத்தனர்.பின்னர் போலீசார் வியாழக்கிழமை இரவு கான்ட் பைபாஸ் அருகே கடத்தல்காரர்களிடம் நடத்திய ஒரு மோதலுக்குப் பின்னர் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.மற்றவர்களை தேடி  வருகிறார்கள்

“விளையாடிய சிறுவனை களவாடிட்டு போய்ட்டிங்களே  ..” -கடத்தல்காரர்களிடம் சிக்கிய சிறுவன் நிலை.