விளைபொருட்களை கொண்டு செல்வதில் பிரச்னையா… விவசாயிகள் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் இதோ!

விளைபொருட்களை கொண்டு செல்வதில் பிரச்னையா… விவசாயிகள் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் இதோ!

தமிழகத்தில் விவசாய பொருட்களைக் கொண்டு செல்வதில் சில இடங்களில் பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இதற்கும் தீர்வு ஒன்றைத் தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் விவசாய பொருட்களைக் கொண்டு செல்வதில் சில இடங்களில் பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இதற்கும் தீர்வு ஒன்றைத் தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.

tn-police-89

தமிழகத்தில் விளைபொருட்களை விற்பனை செய்ய கொண்டு செல்லும் சில விவசாயிகள் தடுக்கப்படுகின்றனர், தாக்கப்பட்டதாக செய்திகளும் வெளியாகிறது. ஊரடங்கு நேரத்தில் உணவுப் பொருட்கள் மக்கள் அனைவருக்கும் கிடைக்க விவசாயிகள் தொடர்ந்து உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க தமிழக காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

police

மாவட்ட வாரியாக போலீஸ் உதவி கமிஷனர், டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் இதற்கென சிறப்பு அதிகாரியாக நியமித்து அவர்கள் போன் எண்களையும் தமிழக காவல் துறை வெளியிட்டுள்ளது. விவசாய விளைபொருட்களை கொண்டு செல்வதில் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக தங்கள் மாவட்டத்துக்கான அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசலாம். உடனடியாக அவர்கள் நடவடிக்கை எடுத்து விவசாய பொருட்கள் தங்கு தடையின்றி கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கூறப்பட்டுள்ளது.