விளம்பரம் பண்ண உங்களுக்கு வேற இடமே கிடைக்கலையாடா?

 

விளம்பரம் பண்ண உங்களுக்கு வேற இடமே கிடைக்கலையாடா?

ஆந்திர மாநில அரசு வருமானத்தைப் பெருக்குவதற்காக, அரசுப் பேருந்துகளில் விற்கப்படும் டிக்கெட்களின் பின்புறம் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. ஏதோ அரசின் பற்றாக்குறைக்கு அவர்கள் இந்தமாதிரி வருமான உத்திகளை கையாண்டு வருகிறார்கள். டிக்கெட்களின் பின்புறம் விளம்பரங்கள் அச்சடிக்கப்பட்டு அந்த பண்டல்கள் ஒவ்வொரு டிப்போவுக்கும் அனுப்பி வைக்கப்படும். அப்படி அனுப்பி வைக்கப்பட்ட டிக்கெட் பண்டல்களில் ஒன்று நெல்லூர் டிப்போவுக்கு வந்திருக்கிறது. டிக்கெட்களை பிரித்து ஒவ்வொரு பேருந்துக்கும் தனித்தனியாக அதிகாரிகள் பிரித்து அனுப்பிவிட்டனர். இதுவரைக்கும் எல்லாமே ஸ்மூத்தா போகுதா, இனிமேதான் இருக்கு வில்லங்கமே! ஏழுமலையானின் திருவிளையாடலோ என்னவோ தெரியவில்லை, நெல்லூரிலிருந்து கிளம்பிய ஒரு பேருந்து போய்ச் சேரவேண்டிய இடம் திருமலை.

பயணிகள் ஒவ்வொருவருக்கும் பின்வாசல் பக்கமிருந்து கண்டக்டர் டிக்கெட் வழங்கிகொண்டே வருகிறார். திடீரென பின்னாலிருந்து ஒரு கூக்குரல் “பஸ்ஸு ஸ்டாப் செய்யண்டீஈஈஈஈ”. என்னவோ ஏதோவென நினைத்து டிரைவர் பிரேக்கின்மேல் ஏறி நிற்க, பேருந்து பாதிவழியில் நிற்கிறது. கத்தியவரின் அருகில் போய் கண்டக்டர் விவரம் கேட்க, அவர் எதுவுமே பேசாமல் டிக்கெட்டை கண்டக்டரிமே காட்டியிருக்கிறார். டிக்கெட்டின் பின்புற விளம்பரத்தில் கிறிஸ்தவர்களின் புனித தலமான ஜெருசலேம் செல்வதற்கு பயண ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் விளம்பரம் அச்சிடப்பட்டிருக்கிறது. ”அது எப்புடி திருமலைக்கு போற பஸ்ல திருச்சபைக்கு போற விளம்பரம் எழுதலாம்” என மிகப்பெருந்தன்மையுடன் கேள்வி எழுப்ப, அட ஆமாம்ல என கண்டக்டரும் டிப்போவுக்கு தகவல் தெரிவிக்க, டிப்போ அதிகாரிகள் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க இப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது எந்த பிரிவின்கீழ் வழக்கு தொடுக்கலாம் என யோசித்துகொண்டிருக்கிறார்களாம். சகிப்புத்தன்மை வாழ்க!