விளம்பரமென்றால் புக்கை மிதிப்பீங்களா… பிரபலத்துக்கு குவியும் கண்டனம்!

 

விளம்பரமென்றால் புக்கை மிதிப்பீங்களா… பிரபலத்துக்கு குவியும் கண்டனம்!

அமெரிக்காவின் பிரபல பாடகி செலினா கோம்ஸ், விளம்பரம் ஒன்றுக்காக புத்தகங்கள் மீது ஏறி நின்ற படம் சமூக ஊடகங்களில் கண்டனங்களைப் பெற்று வருகிறது.
பூமா நிறுவனத்துக்காக அமெரிக்காவின் பிரபல பாடகி செலினா கோம்ஸ் போட்டோஷூட் ஒன்றில் பங்கேற்றுள்ளார். நூலகம் ஒன்றில் அந்த புகைப்பட நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில், புத்தகங்களை எடுக்க ஏணியில் ஏறுவது போலவும், புத்தகங்களுக்கு மத்தியில் அவர் இருப்பது போலவும் நிறைய படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் பிரபல பாடகி செலினா கோம்ஸ், விளம்பரம் ஒன்றுக்காக புத்தகங்கள் மீது ஏறி நின்ற படம் சமூக ஊடகங்களில் கண்டனங்களைப் பெற்று வருகிறது.
பூமா நிறுவனத்துக்காக அமெரிக்காவின் பிரபல பாடகி செலினா கோம்ஸ் போட்டோஷூட் ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

SINGER

நூலகம் ஒன்றில் அந்த புகைப்பட நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில், புத்தகங்களை எடுக்க ஏணியில் ஏறுவது போலவும், புத்தகங்களுக்கு மத்தியில் அவர் இருப்பது போலவும் நிறைய படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதில், சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
பாராட்டு மழை கிடைக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு அதிர்ச்சி. பலரும் செலினாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த புகைப்படத்தில் புத்தகம் ஒன்றில் ஏறி புத்தகத்தை எடுப்பது போல அவர் போஸ் கொடுத்திருந்ததுதான் காரணம்.

SELENA

“இந்துக்கள், இஸ்லாமியர்கள் புத்தகத்தை மிகவும் உயர்வாக கருதுகின்றனர். இந்துக்கள் புத்தகத்தை சரஸ்வதியாக பார்க்கின்றனர். அவர்களின் உணர்வுகளை எல்லாம் செலினா புண்படுத்தவிட்டார்” என்று பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். “புத்தகங்கள் மீது நிற்காதீர்கள், பிறகு எல்லா தேர்விலும் தோல்வி அடைவீர்கள்” என்று சிலர் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர்.