விளம்பரத்திற்காக பேசும் அர்ஜுன் சம்பத் என் சகோதரர் விஜய்யை பற்றி பேசுவதா? பிரபல நடிகை ஆவேசம்!

 

விளம்பரத்திற்காக பேசும் அர்ஜுன் சம்பத் என் சகோதரர் விஜய்யை பற்றி பேசுவதா?  பிரபல நடிகை ஆவேசம்!

வருமான வரித்துறையின் சோதனை முடிந்து நேற்று முன்தினம்  மீண்டும்  விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். 

பிகில்  பட வரிஏய்ப்புக்காக நடிகர் விஜய் வீட்டில்  கடந்த  இருதினங்களுக்கு முன்பு  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.  மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில்  அங்கு சென்ற வருமான வரித்துறையினர்  விஜய்யிடம்  விசாரணை நடத்தினர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் விஜய்   ரசிகர்கள் டிவிட்டரில் #WeStandwithThalapathyVijay என ஹேஷ்டேக்கை  டிரெண்டாக்கி  அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இதையடுத்து வருமான வரித்துறையின் சோதனை முடிந்து நேற்று முன்தினம்  மீண்டும்  விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். 

t

அதேசமயம் நடிகர் விஜய்க்கு அர்ஜுன்  சம்பத்  போன்ற  பாஜக ஆதரவாளர்கள் சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ஜுன் சம்பத் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார். 

ttn

இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக நடிகை ரஞ்சனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில்  இந்து மக்கள்  கட்சியின் அர்ஜுன் சம்பத் போன்ற அரசியல்வாதிகள் நமக்கு தேவையா? சட்டம் குறித்து எந்த அறிவும் இல்லாத ஒருவர் கடந்த காலங்களில் பல்வேறு விஷயங்களில் பொய்களை கக்கி தற்போது விஜய் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்புகிறார். என்னை போன்றவர்கள் மிஸ்டர் அர்ஜுன் சம்பத்தை விளம்பரத்திற்காக  எதையும் செய்பவர் என்றே நினைக்கிறோம்.

ttn

அவர் புதிய தலைமுறையில் கடந்த 7ம் தேதி  ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எந்த ஆதாரமும் இல்லாமல் விஜய்  மற்றும் அவரின் குடும்பத்தை விமர்சித்தார். அவர்  சட்டத்தை மீறுகிறார் என்பது தெரியவில்லையா?. நம் அரசியலமைப்பின்படி ஜனநாயக நாட்டில் ஒரு இடத்தில் வைத்து  பொது இடத்தில் யாரையும் அவமதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. என் சகோதரர் விஜய்க்காக மட்டும் பேசவில்லை. எல்லா பிரபலங்களுக்காகவும் தான் பேசுகிறேன்.

பொது வாழ்க்கையில் ஈடுபடுவதால் எங்களை அவமானப்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை. சட்டத்துறைகளும் தேசிய மனித உரிமை ஆணையமும்  அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். தமிழக அரசியலையும் சினிமாவையும் யாராலும்  பிரித்து பார்க்கமுடியாது. காரணம்  மறைந்த முன்னாள் முதல்வர்களான டாக்டர் அண்ணா, டாக்டர் கலைஞர், டாக்டர் எம்.ஜி.ஆர். மற்றும் டாக்டர் ஜெயலலிதா ஆகியோர் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தான். அதனால் எங்களை கிண்டல் செய்வது, பொம்மைகளை போல எங்களை நடத்துவதை நிறுத்துங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.