‘விளம்பரத்தால்’ சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி: அலுவலகத்தை முற்றுகையிட போவதாக எச்சரிக்கை!

 

‘விளம்பரத்தால்’ சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி: அலுவலகத்தை முற்றுகையிட போவதாக எச்சரிக்கை!

படங்கள் மட்டுமில்லாது பல்வேறு நிகழ்ச்சிகள்,  விளம்பர படங்களில் நடித்து வரும்  விஜய் சேதுபதிக்கு எதிராக சர்ச்சை கிளம்பியுள்ளது.

சென்னை: சிறுகுறு வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடித்த  நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

தமிழில் குறுகிய காலத்தில் முன்னணி  நடிகராக வளர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆண்டுக்கு 8 முதல் 10 படங்களை வெளியிட்டு மாஸ் காட்டி வருகிறார். படங்கள் மட்டுமில்லாது பல்வேறு நிகழ்ச்சிகள்,  விளம்பர படங்களில் நடித்து வரும்  விஜய் சேதுபதிக்கு எதிராக சர்ச்சை கிளம்பியுள்ளது.

sethupathi

இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி ‘மண்டி’ என்ற தனியார் ஆன்லைன் நிறுவன  விளம்பரத்தில்  நடித்திருந்தார். இதற்கு தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

vijay

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுகுறு வியாபாரிகளைப் பாதிக்கும் ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் பணம் வாங்கி கொண்டு நடித்து அவர்களுக்குத்  துணை போயுள்ள விஜய் சேதுபதியை கண்டிப்பதாகவும், அவரும் நவம்பர் 4 ஆம் தேதி விருகம்பாக்கத்தில் உள்ள அவரது  அலுவலகத்தை முற்றுகையிட போவதாகவும் அறிவித்துள்ளது. இந்த போராட்டமானது வணிக போராளி கொளத்தூர் த.ரவி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.