வில் ஸ்மித் செய்த சனி தோஷ பரிகாரம்!

 

வில் ஸ்மித் செய்த சனி தோஷ பரிகாரம்!

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சனி தோஷம் நீங்குவதற்காக ஹரித்துவாரில் ருத்ர அபிஷேகம் செய்தார்.

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சனி தோஷம் நீங்குவதற்காக ஹரித்துவாரில் ருத்ர அபிஷேகம் செய்தார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். உலகில் மிக வன்மையான நடிகர் என்று அமெரிக்காவின் நியூஸ்வீக் இதழ் குறிப்பிட்ட வில் ஸ்மித் பல கிராமி விருதுகளை வென்றுள்ளார். ஒரு தங்கக் கோள் விருதுகள், இரண்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டும் உள்ளார்.

will smith

இதன் இடையே ஆவணப்படம் ஒன்றில் நடிப்பதற்காக இந்தியா வந்துள்ளார் வில் ஸ்மித் . கடந்த வாரம் இந்தியா வந்த அவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு ஹரித்துவார் சென்ற அவர், அதன் பின்னர் அங்குள்ள பிரபல ஜோதிடரை சந்தித்துப் பேசியுள்ளார்.

அப்போது வில் ஸ்மித்துக்கு சனி தோஷம் இருப்பதாக ஜோதிடர் கூறியுள்ளார். பின்னர் ஜோதிடரின் ஆலோசனைப்படி அங்குள்ள சிவன் கோயிலுக்குச் சென்றவர், சனி தோஷம் நீங்குவதற்காக சிவனுக்கு ருத்ர அபிஷேகம் செய்துள்ளார். இதேபோல, ரிஷிகேஷ் சென்று கங்கா ஆரத்தியும் எடுத்து வழிபட்டுள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.