வில்வ இலைகளுக்கு இத்தனை சக்தியா? அடுத்த முறை மறக்காமல் கவனித்து பாருங்க!

 

வில்வ இலைகளுக்கு இத்தனை சக்தியா? அடுத்த முறை மறக்காமல் கவனித்து பாருங்க!

பிரதோஷ காலங்களில் நந்தியைச் சுற்றி வில்வ மாலையுடன் முண்டியடிக்கும் பக்தர்கள் கூட்டத்தைப் பார்த்திருக்கலாம். கடவுள் நாம் கேட்கும் வரங்களை எல்லாம் தருவார். ஆனால், அதற்கான முயற்சிகளை நாம் தான் செய்ய வேண்டும்.

பிரதோஷ காலங்களில் நந்தியைச் சுற்றி வில்வ மாலையுடன் முண்டியடிக்கும் பக்தர்கள் கூட்டத்தைப் பார்த்திருக்கலாம். கடவுள் நாம் கேட்கும் வரங்களை எல்லாம் தருவார். ஆனால், அதற்கான முயற்சிகளை நாம் தான் செய்ய வேண்டும். தினந்தோறும் இல்லையென்றாலும் ஒவ்வொரு பிரதோஷத்தின் போதாவது சில வில்வ இலைகளைச் சாப்பிட்டு வந்தால், ஆன்மிகத்தோடு உங்கள் ஆரோக்கியமும் மேம்படும்.

archery leaves

வில்வ இலைகள் பூஜைக்கு மட்டுமல்லாமல் சித்த வைத்திய முறைகளிலும் பெரும் பங்கு வகிக்கிறது. காய்ச்சல், அனிமீயா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்ற நோய்களுக்கான வைத்தியத்தில் வில்வ இலையை சித்த மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள். 
ஆலயங்களில் தல விருட்சமாக வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு தனிப்பட்ட மருத்துவ சக்திகள் உண்டு. அதனால் தான் இவற்றை தல விருட்சமாக வைத்திருக்கிறார்கள். வில்வ மரமும் தெய்விக மூலிகை மரம் தான். வில்வமரத்தின் நிழலுக்கும், காற்றுக்கும் கூட மருத்துவ சக்தி இருக்கிறது. இறைவனை தரிசித்து, தல விருட்சத்தைச் சுற்றி வரும் பொழுது நாம் சுவாசிக்கின்ற காற்றே பல நோய்களை விரட்டிவிடுகின்றது.
வில்வ மரத்தின் வேர், உடலைத் தேற்றும். சதை, நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம்  மலம் இளக்கியாகச் செயல்படுகிறது. பழத்தின் ஓட்டிற்கு காய்ச்சலைப் போக்கும் சக்தி உண்டு. பூ மந்தத்தைப் போக்கும்.

archery leaves

வில்வத் தளிரை வதக்கி, சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு குணமாகும். இலைகளுக்கு காச நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
இதன் பூ வாய் துர்நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும். பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு  புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். நெஞ்சு  வலியைப் போக்கும்.
வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது. 

archery leaves

வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.  வில்வப் பழமும் எள் எண்ணெயும் சேர்த்து தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி காதில் விட்டு பஞ்சால் அடைக்க வேண்டும்  நாளடைவில் செவி நோய்கள் நீங்கிவிடும்.
வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால்  பற்களில் உண்டாகும் பல நோய்கள் போய்விடும்.
ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து 8 மணி நேரம் கழித்து, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு  நீரை மட்டும் அருந்தினால் தீராத வயிற்று வலி தீரும். 
வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி, தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் மூல நோய் நாளடைவில் சரியாகிவிடும்