விலங்குகள் போல் காஷ்மீர் மக்கள் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளனர்- மெகபூபா முப்தி மகள் குற்றஞ்சாட்டு…

 

விலங்குகள் போல் காஷ்மீர் மக்கள் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளனர்- மெகபூபா முப்தி மகள் குற்றஞ்சாட்டு…

விலங்குகள் போல் காஷ்மீர் மக்கள் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளனர் என அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு முந்தையநாள் இரவில் பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை காவலில் வைக்கப்பட்டனர்.

காஷ்மீர்

இந்நிலையில் மெகபூபா முப்தியின் மகள் இல்டிஜா ஜாவேத் 2வது வாய்ஸ் மெசேஞ் ஒன்றை வெளியிட்டார். அதில், என்னுடைய அம்மா காவலில் வைக்கப்பட்ட சில நாட்கள் கழித்து நானும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இல்டியா ஜாவேத் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தத்தில், காஷ்மீர் மக்கள் விலங்கு போல் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை நாடு முழுவதும் இந்தியாவின சுதந்திர தினத்தை கொண்டாடப்படுகிறது.

என் வீட்டுக்கு வந்து சென்றவர்கள் குறித்த தகவல்களை அதிகாரிகள் என்னிடம் தெரிவிக்கவில்லை. மேலும் வீட்டை வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை. என்னுடைய ஊடக பேட்டிகளை சுட்டிக்காட்டி வீட்டுக்காவலில் வைக்க அதுதான் காரணம் என்று கூறுகின்றனர். மீண்டும் பேசினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என நான் மிரட்டப்பட்டேன்.

அமித் ஷா

சர்வதேச அளவில் மிகப்பெரிய ஜனநாயகத்தில், கற்பனை கூட செய்யமுடியாத அடக்குமுறை குறித்து பேச குடிமகன்களுக்கு உரிமை இல்லை. கடினமான உண்மையை கூறியதற்காக நான் போர் குற்றவாளியாக நடத்தப்படுகிறேன் என்பது சோகமான முரண். தொடர்ந்து நிலையான கண்காணிப்பில் நான் இருக்கிறேன். காஷ்மீர் மக்களுடன் என்னுடைய வாழ்க்கை குறித்தும் நான் அஞ்சுகிறேன் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.