விலங்குகளை தாக்கும் கொரோனா… உயிரியியல் பூங்காவிலுள்ள விலங்குகளை 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவு!

விலங்குகளை தாக்கும் கொரோனா… உயிரியியல் பூங்காவிலுள்ள விலங்குகளை 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவு!

அமெரிக்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா  முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களை உச்சகட்ட எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய உயிரியியல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. 

 அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ப்ராங்ஸ் வன உயிரியல் பூங்காவில் உள்ள 4 வயதான நடியா என்ற பெண் புலி வறட்டு இருமலால் அவதிப்பட்டு வந்தது. இதையடுத்து அதன் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் அதற்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

tiger 

இந்நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் எஸ்.பி.யாதவ் கடிதம் எழுதியுள்ளார். அதில் உச்சபட்ச எச்சரிக்கையில் இருக்கும்படி கூறியுள்ளார். ஏதேனும் வித்தியாசமான அறிகுறிகள் தெரிகிறதா என விலங்குகளை 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பாலூட்டிகள் அதிலும் குறிப்பாக பூனை குடும்ப விலங்குகள், குரங்கினங்கள் போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு என்பதால் அவற்றை கவனமுடன் கண்காணித்து சந்தேகம் ஏற்படும் விலங்குகளின் மாதிரிகள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை எடுத்து சோதனைக்கு அனுப்பவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.