விற்பனை குறைந்தாலும் லாபம் குறையவில்லை.. 3 மாதத்தில் ரூ.742 கோடி லாபம் பார்த்த அம்புஜா சிமெண்ட்ஸ்

 

விற்பனை குறைந்தாலும் லாபம் குறையவில்லை.. 3 மாதத்தில் ரூ.742 கோடி லாபம் பார்த்த அம்புஜா சிமெண்ட்ஸ்

அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.742.59 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று அம்புஜா சிமெண்ட்ஸ். இந்நிறுவனம் ஜனவரி-டிசம்பர் காலத்தை தனது நிதியாண்டாக கொண்டு செயல்படுகிறது. கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் விற்பனை சரிவு கண்டுள்ளது. இருப்பினும் அந்த காலாண்டில் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளது.

பணம்

அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.742.59 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 6.80 சதவீதம் அதிகமாகும். அதேசமயம் இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.9 சதவீதம் குறைந்து ரூ.6,391.47 கோடியாக குறைந்தது.

அம்புஜா சிமெண்ட்ஸ்

அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் சிமெண்ட் விற்பனை 12 சதவீதம் குறைந்ததால் வருவாய் குறைந்துள்ளது. வருவாய் குறைந்தாலும் வலுவான செயல் திறன் காரணமாக லாபம் அதிகரித்துள்ளதாக அம்புஜா சிமெண்ட் தெரிவித்துள்ளது. வழக்கான பருவமழை மற்றும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் பாலிசி ஆதரவு நடவடிக்கைகள் போன்றவற்றால் குறுகிய கால அடிப்படையில் சிமெண்ட் தேவை நிலையாக இருக்கும் என அம்புஜா சிமெண்ட்ஸ் கணித்துள்ளது.