விற்பனை குறைந்ததால் லாபமும் குறைந்தது… 3 மாசத்துல ரூ.1,292 கோடி தான் லாபம் …. மாருதி சுசுகி இந்தியா தகவல்

 

விற்பனை குறைந்ததால் லாபமும் குறைந்தது… 3 மாசத்துல ரூ.1,292 கோடி தான் லாபம் ….  மாருதி சுசுகி இந்தியா தகவல்

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,292 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது மாருதி சுசுகி இந்தியா. இந்நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் குறைந்துள்ளது. அந்த காலாண்டில் உள்நாட்டில் கார்களுக்கான தேவை குறைந்ததே இதற்கு முக்கிய காரணம். மேலும் லாக்டவுனும் தேவை குறைவை அதிகரித்தது இதனால் மாருதி சுசுகி இந்தியாவின் விற்பனை பாதித்தது.

மாருதி சுசுகி இந்தியா ஷோரூம்

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் (2020 ஜனவரி-மார்ச்) நிகர லாபமாக ரூ.1,292 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 28 சதவீதம் குறைவாகும். 2019 மார்ச் காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,796 கோடி ஈட்டியிருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் உள்நாட்டில் 3.60 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது 16 சதவீதம் குறைவாகும்.

மாருதி கார் தயாரிப்பு ஆலை

தொற்று நோயான கொரோனா வைரஸால் ஏற்படும் இடையூறுகளால் எங்களது வர்த்தகம் மற்றும் புதிய அறிமுக திட்டங்களில் பாதிப்பு ஏற்படும். இருப்பினும் வேலைகள் மற்றும் சம்பளத்தை குறைக்கும் திட்டம் நிறுவனத்திடம் இல்லை என மாருதி சுசுகி இந்தியா தெளிவுப்படுத்தியுள்ளது