விற்பனையில் கொடி கட்டு பறக்கும் மாருதி கார்கள்

 

விற்பனையில் கொடி கட்டு பறக்கும் மாருதி கார்கள்

கடந்த மே மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார் மாடல்களில் 8 மாருதி நிறுவனத்தின் மாடல்கள் என இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது. அந்த மாதத்தில் ஒட்டு மொத்த அளவில் 2.39 லட்சம் பயணிகள் வாகனங்கள் மட்டுமே விற்பனையானது. 2018 மே மாதத்தில் 3.01 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது.

கடந்த மே மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார் மாடல்களில் 8 மாருதி நிறுவனத்தின் மாடல்கள் என இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது. அந்த மாதத்தில் ஒட்டு மொத்த அளவில் 2.39 லட்சம் பயணிகள் வாகனங்கள் மட்டுமே விற்பனையானது. 2018 மே மாதத்தில் 3.01 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. ஆக கடந்த மே மாதம் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு சோதனையான காலமாகத்தான் இருந்து வந்தது.

maruthi

சென்ற மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 10 கார் மாடல்களில் 8 மாருதி மாடல்கள். கடந்த மே மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களில் முதலிடத்தில் மாருதியின் ஸ்விப்ட் உள்ளது. அந்த மாதத்தில் 17,039 ஸ்விப்ட் கார்கள் விற்பனையானது. 

இரண்டாவது அதிகம் விற்பனையான கார் மாடல் மாருதியின் அல்டோ. 2019 மே மாதத்தில் 16,394 அல்டோ கார்கள் விற்பனையானது. மாருதியின் செடான் டிசையர் விற்பனையில் 3வது இடத்தை பிடித்தது. அந்த மாதத்தில் நம்மவர்கள் 16,196 செடான் டிசையர்களை வாங்கி உள்ளனர். மாருதியின் பலேனோ 4வது இடத்தை பிடித்துள்ளது. சென்ற  மாதத்தில் 15,176 பலேனோ கார்களை மாருதி நிறுவனம் விற்பனை செய்து இருந்தது.

maruthi

மாருதியின் வேகன் ஆர் மாடல் 5வது இடத்தை பிடித்தது. கடந்த ஒரு மாதத்தில் 14,561 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகி இருந்தது. மாருதியின் இகோ மாடல் கார் 6வது இடத்தை பிடித்தது.  அந்த மாதத்தில் 11,739 இகோ கார்கள் விற்பனையானது. 7வது இடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரிடா மாடல் பிடித்தது. கடந்த மே மாதத்தில் 9,054 கிரிடா கார்கள் விற்பனையானது. 8வது இடத்திலும் ஹூண்டாய் நிறுவன கார் மாடல் பிடித்துள்ளது. ஹூண்டாயின் எலைட் ஐ20 மாடல் 8,958 விற்பனையாகி இருந்தது.

மாருதியின் எர்டிகா மற்றும் விதாரா பிரேசா ஆகிய மாடல் கார்கள் முறையே 9 மற்றும் 10வது இடங்களை பிடித்தன. அந்த மாடல் கார்கள் முறையே 8,864 மற்றும் 8,781 கார்கள் விற்பனையாகி இருந்தது.