விற்பனைக்கு வந்தது oppo Reno 2Z ஸ்மார்ட் போன்கள்.. சிறப்பம்சங்கள் என்ன? எந்த அளவிற்கு நம்பிக்கையானவை?

விற்பனைக்கு வந்தது oppo Reno 2Z ஸ்மார்ட் போன்கள்.. சிறப்பம்சங்கள் என்ன? எந்த அளவிற்கு நம்பிக்கையானவை?

இந்திய தொழில்நுட்ப பங்குச்சந்தையில் oppo Reno 2Z ஸ்மார்ட் போன்கள்  ஆஃப்லைன் விற்பனைக்கு வந்துள்ளது. 

ஒப்போ இந்திய தொழில்நுட்ப சந்தையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை பெற்றுவருகிறது. பத்தாயிரம் முதல் இருபதாயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் உள்ள ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் ஓப்போ நிறுவனம் கொடிகட்டி பறக்கிறது. 

இந்திய தொழில்நுட்ப பங்குச்சந்தையில் oppo Reno 2Z ஸ்மார்ட் போன்கள்  ஆஃப்லைன் விற்பனைக்கு வந்துள்ளது. 

oppo reno 2

ஒப்போ இந்திய தொழில்நுட்ப சந்தையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை பெற்றுவருகிறது. பத்தாயிரம் முதல் இருபதாயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் உள்ள ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் ஓப்போ நிறுவனம் கொடிகட்டி பறக்கிறது. 

இதனை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல 30 ஆயிரம் ரூபாய் அளவிலான ஸ்மார்ட்போன்களை தற்பொழுது தொழில்நுட்ப சந்தையில் ஓப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முன்பில்லாத அளவிற்கு இந்த ஸ்மார்ட்போன்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின் இறுதி வாரத்தில் ஓப்போ ரெனோ 2Z ஸ்மார்ட் போன்கள் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்தது. கடந்த இரண்டு வாரங்களாக ஆன்லைனில் மட்டுமே பெறக்கூடியதாக இருந்து வந்தது. 

reno 2

இந்நிலையில் இன்று முதல் ஒப்போ ரெனோ 2Z ஸ்மார்ட் போன்களை இனி ஆஃப்லைனிலும் பெற்றுக்கொள்ளலாம் என ஒரு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஓப்போ ரெனோ 2Z – சிறப்பம்சங்கள்

-19.5:9 ரேஷியோ உள்ள 6.53-இன்ச் FHD+ டிஸ்பிளே.  

-கொரில்லா கிளாஸ் வெர்ஷன் 5.

-8GB RAM வசதி, மீடியாடெக் ஹீலியோ P90 SoC ப்ராசஸர்.

-VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 வசதியுடன் 4,000mAh, டைப்-C சார்ஜிங் போர்ட்.

-நான்கு பின்புற கேமராக்கள் – 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல், இரண்டு 2 மெகாபிக்சல்.

-முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா. 

-2x அப்டிகல் ஜூம், EIS வீடியோ நிலைப்பாடு, 60fps ப்ரேம் ரேட்டுடன் மிகவும் நிலையான விடியோவை எடுக்கும் திறன், அல்ட்ரா-நைட் மோட் வசதி.

reno 2

ஓப்போ ரெனோ 2Z ஸ்மார்ட்போனிற்கு இந்திய தொழில்நுட்ப சந்தையில் 29,990 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்படுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன்கள் கருப்பு (Luminous Black), வெள்ளை (Sky White), மற்றும் போலார் லைட் (Polar Light) என மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட் போன்களுக்கான முன்பதிவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இதன் விற்பனை புதிய உச்சத்தை தொடும் என ஓப்போ நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்மார்ட் போனுடன் மேலும் இரண்டு புதிய ரெனோ மாடல் ஸ்மார்ட்போன்கள் வெளிவந்திருக்கிறது. அவை, ஓப்போ ரெனோ 2 மற்றும் 2F என்பது குறிப்பிடத்தக்கது.