விறுவிறு வாக்குப்பதிவும்… எதிர்பார்ப்பில்  முடிவுகளும்..! அனல் பறக்கும் ’அரசியல் களம்’

 

விறுவிறு வாக்குப்பதிவும்… எதிர்பார்ப்பில்  முடிவுகளும்..! அனல் பறக்கும் ’அரசியல் களம்’

தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக வரும், யாருக்கு பாதகமாக வரும் என்பது இன்னும் 3 நாட்களில் தெரியவரும். மீண்டும் பாஜக அரியணையில் ஏறுமா? அல்லது மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக வரும், யாருக்கு பாதகமாக வரும் என்பது இன்னும் 3 நாட்களில் தெரியவரும். மீண்டும் பாஜக அரியணையில் ஏறுமா? அல்லது மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

result

இந்தியா முழுவதும் 17-வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த வாக்குப்பதிவுகளுக்கான முடிவுகள் வரும் 23 அன்று எண்ணப்படவிள்ளன. மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி வேலூர் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவை தேர்தல் முடிந்த அடுத்த நொடியே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நோக்கி ஊடகங்கள் ஓடத்தொடங்கின. அனைத்து ஊடகங்களின் கருத்துக்கணிப்பும் பாஜகவிற்கு சாதகமாகவே அமைந்துள்ளன. 

party

பல ஆங்கில செய்தி தொலைக்காட்சியின் கருத்துப்படி, 542 இடங்களில் பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 308 இடங்களை வெல்லும் என்று  எதிர்பார்க்கப்படுவதாகவும் அதேவேளையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 117 இடங்களும், மற்றவர்கள் 117 இடங்களைப் பெறுவார்கள் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது. ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்புகள் எப்பொழுதும் சரியாக இருந்ததில்லை. அவை அப்படியே தலைகீழாக மாற வாய்ப்புள்ளது என்றும் பல தலைவர்கள் தெரிவித்துவருகின்றனர். ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் தென் இந்தியர்கள், பாஜகவையே மீண்டும் அரியணையில் அமரவைக்க முயற்சிக்கும் வட இந்தியர்கள் என தேர்தல் களம் படு சூடாக உள்ளது. தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக வரும், யாருக்கு பாதகமாக வரும் என்பது இன்னும் 3 நாட்களில் தெரியவரும். மீண்டும் பாஜக அரியணையில் ஏறுமா? அல்லது மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

votters

ஒற்றுமையை கூட்டிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள், வாக்காளர்களையும், வாக்கு விகிதத்தையும் நம்பாது கடவுளின் நம்பிக்கையையும், ராசிப்பலனையும் தேடிக்கொண்டிருக்கும் ஆளுங்கட்சியினர் என தேர்தல் களம் பரப்பரப்பாக சுழன்றுக்கொண்டிருக்கிறது.