விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை !

 

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை !

அனைத்து வாக்குப்பெட்டிகளும் 315 வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.

3 ஆண்டுகளாக நடத்தப் படாமல் இருந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 27 மற்றும் 30 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு நடைபெற்றது. அந்த அனைத்து வாக்குப்பெட்டிகளும் 315 வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. முதற்கட்ட தேர்தலில் 76.19 % வாக்குகளும். இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவானது. 

ttn

இன்று காலை 7 மணிக்கு அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும், தேர்தல் முகவர்களின் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு, 8 மணிக்கு பொதுவான வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 4 வகையான வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

ttn

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் இரண்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், வாக்கு எண்ணும் அனைத்து மையங்களிலும் சேர்த்து மொத்தமாக 30,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.