விரைவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தேர்தல் !

 

விரைவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தேர்தல் !

நேற்று மாலை அனைத்து பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கைகளை நிறைவடைந்து தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இதை ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. முதற்கட்ட தேர்தலில் 76.19 % வாக்குகளும் இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவானது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 315 மையங்களில் ஜனவரி 2 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை அன்று நிறைவு பெறாத நிலையில், நேற்றும் வாக்கு எண்ணிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அதன் பின்பு நேற்று மாலை அனைத்து பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கைகளை நிறைவடைந்து தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

ttn

இது குறித்து சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை குறித்த அனைத்து தகவல்களையும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஊரக உள்ளாட்சித் தேர்தல் நூற்றுக்கு நூறு சதவீதம் எந்த வித முறைகேடுகளும் இல்லாமல் நேர்மையான முறையில் நடத்தப்பட்டது. விரைவில்,  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார். 

ttn

மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வரும் ஜனவரி 6 ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் காலை 10 மணிக்குப் பதவியேற்பார்கள் என்று தெரிவித்தார்.