விரைவில் போகோ எஃப் 2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது

 

விரைவில் போகோ எஃப் 2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது

போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து விரைவில் போகோ எஃப்2 ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது.

பெய்ஜிங்: போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து விரைவில் போகோ எஃப்2 ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது.

போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, போகோ எஃப்2 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகிறது. இதுகுறித்த தகவல்களை ஜீக்பெஞ்ச் இணையதளம் வெளியிட்டுள்ளது. போகோ எஃப்2 ஸ்மார்ட்போனில் குவால்கம் ஸ்நாப்டிராகன் 845 பிராசஸர் இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனானது ஆண்டுராய்டு 9.0 பை இயங்குதளத்தில் இயங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்பில்டு மெமரி கொண்டுள்ளது. அதேபோல 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலும் வெளியாகவுள்ளது. சமீபத்தில் தான் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனின் ஆர்மர்டு எடிஷன் வெளியிடப்பட்டது. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தது.