விரைவில் நீடாமங்கலத்தில் நெல் ஜெயராமன் பெயரில் நெல் பாதுகாப்பு மையம் – முதலமைச்சர் 

விரைவில் நீடாமங்கலத்தில் நெல் ஜெயராமன் பெயரில் நெல் பாதுகாப்பு மையம் – முதலமைச்சர் 

டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, விவசாயிகள் சங்கங்கள் சார்பில் திருவாரூரில் பாராட்டு விழா நடைபெற்றது.  விழாவில் பங்கேற்க மாட்டு வண்டி ஓட்டிய படி மேடைக்கு வந்தார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி

அதன்பின் பேசிய முதலமைச்சர் பழனிசாமி,  “விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று ரூ.650 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்படும். விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.7,618 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மறைந்த இயற்கை வேளாண் விவசாயி நெல் ஜெயராமன் பெயரில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இயற்கை நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். அதன் மதிப்பு ரூ.50 லட்சம். ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற அரசு பரிசீலனை செய்து வருகிறது” எனக் கூறினார்.