விரைவில் தர்பார் இசை… அனிருத் கொடுத்த அப்டேட்!

 

விரைவில் தர்பார் இசை… அனிருத் கொடுத்த அப்டேட்!

ரஜினிகாந்த்  காவலராக நடித்துள்ள  இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக  நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த்  காவலராக நடித்துள்ள  இப்படத்தில் ரஜினி ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

darbar

ஏற்கனவே தர்பார் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. அந்த வரிசையில்  மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம்   நடிகர் ரஜினிகாந்த்தும்  டப்பிங் பணிகளை  முடித்து விட்டார். 

darbar

இந்நிலையில்  தர்பார்  டீசர், இசை வரும் டிச.12ம் தேதி சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், படத்தின் இசையமைப்பாளர் அனிருத், ‘கெட் ரெடி ஃபோக்ஸ்.. சரவெடி ஆல்பம் லோடிங்..!’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் விரைவில் தர்பார் இசைக்குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக  தர்பார் திரைப்படம் வரும்  பொங்கலன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது   குறிப்பிடத்தக்கது.