விரைவில் தமிழகத்துக்கு வரவுள்ள காவிரி நீர்: உற்சாகத்தில் தமிழக மக்கள்!

 

விரைவில் தமிழகத்துக்கு வரவுள்ள காவிரி நீர்: உற்சாகத்தில் தமிழக மக்கள்!

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்

கர்நாடகா:  தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

water

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் குடிநீர் இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மருவ மழையும் பொய்த்து போயுள்ளது. இதனால் பள்ளி, மருத்துவனை, அலுவலகம் செல்வோரும் வீட்டிலேயே முடங்கி போகும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். 

kumarasamy

இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி ராமநகர் தொகுதியில் குமாரசாமி சுற்றுப்பயணம் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி நீர் விவகாரத்தில் யார் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்த வேண்டும் என்பதை காவிரி மேலாண்மை  ஆணையம்  முடிவு செய்கிறது. அதன் உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய நிலைக்கு நாம்  தள்ளப்பட்டுள்ளோம்’ என்று கூறியுள்ளார். 

குமாரசாமியின் இந்த பேச்சால் விரைவில்  தமிழகத்தின்  குறுவை சாகுபடிக்காக கர்நாடகாவிலிருந்து காவிரி நீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஓங்கியுள்ளது.  காவிரிலிருந்து நீர் கிடைப்பதன் மூலம் ஓரளவு தண்ணீர் தட்டுப்பாட்டை நம்மால்  குறைக்க முடியும்.