விரைவில் ட்விட்டரில் வர இருக்கும் பெரிய மாற்றம்..!

 

விரைவில் ட்விட்டரில் வர இருக்கும் பெரிய மாற்றம்..!

ட்விட்டரில் எடிட் வசதி அறிமுகப் படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார்.

டெல்லி: ட்விட்டரில் எடிட் வசதி அறிமுகப் படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர், ஜாக் டோர்சி. இந்தியாவில் தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் இவர், டெல்லி ஐஐடியில் மாணவர்களிடையே உரையாற்றினார். அதன்பின் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ட்விட்டரில் எடிட் வசதி அறிமுகப்படுத்தப்படுமா? என மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஜாக், “எடிட் வசதி கொடுக்கப்படுவதில் நன்மை மட்டுமல்லாமல் சில தீமைகளும் இருக்கிறது. எழுத்துப்பிழையை சரிசெய்வதற்கு மட்டும் எடிட் வசதி பயன்படுத்தப்படப் போவதில்லை. இதன்மூலம் அவர்கள் பதிவிட்ட கருத்துக்களை மாற்றியமைக்கவும் முடிவும். இதனால் பல பிரச்சனைகள் உருவாகும். இருப்பினும் அதற்கான பரிசீலனைகள் நடைபெற்று வருகிறது.” என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், ட்விட்டர் வாசிகளிடையே எடிட் வசதி அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.