விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்!

 

விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்!

கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக  விஜயா கமலேஷ் தஹில் ரமணி  பதவியேற்றார்.

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

RAMANI

கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக  விஜயா கமலேஷ் தஹில் ரமணி  பதவியேற்றார். இவர் முன்னதாக மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர்.  

mittal

இந்நிலையில், உச்சநீதிமன்ற கொலிஜியம் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடிவு எடுத்துள்ளது.இதற்கு கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மேகாலயா நீதிமன்றத்தை வலுப்படுத்த தஹிலை நியமனம் செய்யப்படுவதாகத் தெரிகிறது. இதன் காரணமாகச் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மேகாலயா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அவர் விரைவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை  நீதிபதியாகப் பதவியேற்பார் என்று தெரிகிறது.