விரைவில் ஆரம்பமாகவுள்ளது “பகவதி-2” திரைப்படம்…!

 

விரைவில் ஆரம்பமாகவுள்ளது “பகவதி-2”  திரைப்படம்…!

இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்கினார். இதில் நடிகர்கள் ரீமா சென், வடிவேலு, நடிகர் ஜெ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பகவதி. இப்படத்தை இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்கினார். இதில் நடிகர்கள் ரீமா சென், வடிவேலு, நடிகர் ஜெ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

ttn

இந்த படத்தின் இயக்குநர்  வெங்கடேஷ்  இயக்குநர்  என்பதை தாண்டி சமீபகாலமாகப் படங்களில் வில்லனாக தோன்றி  மிரட்டி வந்தார். அங்காடி தெரு படத்தில்  நடித்து வரவேற்பை பெற்றார், சமீபத்தில் அசுரன் படத்தில் தனுஷின் இளமைக்கால முதலாளியாக நடித்திருந்தார். இப்படத்திற்குப் பிறகு  வெங்கடேஷுக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். தற்போது 4 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். 

இந்நிலையில் இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் மீண்டும் பகவதி 2  திரைப்படம்  உருவாகவுள்ளது. முன்னணி நடிகர் இப்படத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.  

ttn

பகவதி படத்தில் காமெடி பெரிய அளவில் ஹிட் அடித்தது.  இருப்பினும் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி  படமாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.