விரைவில் ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு பெறலாம்! ஆவணங்கள் எதுவும் தேவையில்லை…

 

விரைவில் ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு பெறலாம்! ஆவணங்கள் எதுவும் தேவையில்லை…

ஆன்லைனில் உடனடியாக இ பான் கார்டு பெறும் வசதியை வருமான வரித்துறை இன்னும் சில வாரங்களில் அறிமுகம் செய்ய உள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவதற்கு மட்டுமே பயன்பட்டு வந்த பான் (நிரந்த கணக்கு எண்) கார்டு  தற்போது வங்கியில் கணக்கு தொடங்க, விலையுயர்ந்த பொருட்களை வாங்க என பல்வேறு விஷயங்களுக்கு பான் கார்டு தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பான் கார்டு பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பான் கார்டை வருமான வரித்துறை வழங்கி வருகிறது. 

ஆதார் கார்டு

பொதுவாக பான் கார்டு பெற பல நாட்கள் நாம் காத்திருக்க வேண்டியது இருக்கிறது. தற்போது அதற்கு வருமான வரித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆன்லைனில் ஆதார் தகவல் அடிப்படையில் உடனடியாக எலக்ட்ரானிக் பான் (இ பான்) கார்டு பெறும் வசதியை வருமான வரித்துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அண்மையில் இது தொடர்பாக  சோதனை முயற்சியை மேற்கொண்டது. அப்போது 8 நாட்களில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ பான் வழங்கியது. இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்ததையடுத்து அதனை நாடு முழுவதும் செயல்படுத்த வருமான வரித்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. 

பான் கார்டு

ஆன்லைனில் இ பான் பெற ஆதார் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும் ஒன் டைம் பாஸ்வேர்டு மூலம் விண்ணப்பத்தாரரின் அடையாளம் சரிபார்க்கப்பட்டு உடனடியாக கியூஆர் கோடுடன் இ பான் கிடைத்து விடும். வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை. இன்னும் சில வாரங்களில் இந்த வசதியை வருமான வரித்துறை நாடு முழுவதும் செயல்படுத்தும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.