விரைவில் அயோத்தி வழக்குத் தீர்ப்பு: சட்ட ஒழுங்கை பராமரிக்க மத்திய அரசு சுற்றறிக்கை!

 

விரைவில் அயோத்தி வழக்குத் தீர்ப்பு: சட்ட ஒழுங்கை பராமரிக்க மத்திய அரசு சுற்றறிக்கை!

நீண்ட காலமாக நிலுவையிலிருந்து வந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ளதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

நீண்ட காலமாக நிலுவையிலிருந்து வந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ளதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தீர்ப்பு வெளியாகும் போது எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க உத்திரப்பிரதேசத்துக்கு கூடுதலாக 4,000 போலீஸ் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சட்ட ஒழுங்கை பராமரிக்க நவம்பர் இறுதி வரை காவல்துறையினர் விடுப்பு எடுக்கக் கூடாது என்று காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Ayodhya

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Ayodhya ttn

அதில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ளதால் தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அசம்பாவிதங்கள் நிகழ்வதைத் தடுக்க உளவுத்துறை அளிக்கும் தகவலைப் பின்பற்ற வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.