விருதுகளை அள்ளிய ‘1917’ திரைப்படம்; 73-வது பிரிட்டிஷ் அகாடமி ஃபிலிம் விருதுகள்

 

விருதுகளை அள்ளிய ‘1917’ திரைப்படம்; 73-வது பிரிட்டிஷ் அகாடமி ஃபிலிம் விருதுகள்

சாம் மெண்டிஸ் இயக்கிய ‘1917’ திரைப்படம் மொத்தம் 7 பாஃப்டா விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

லண்டன்: சாம் மெண்டிஸ் இயக்கிய ‘1917’ திரைப்படம் மொத்தம் 7 பாஃப்டா விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

பாஃப்டா என்று சுருக்கமாக அழைக்கப்படும் 73-வது பிரிட்டிஷ் அகாடமி ஃபிலிம் விருதுகள் விழா லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் கோலாகலமாக நடந்தது. ஆஸ்கர் விருதுகளுக்கு நிகராக இந்த விழாவில் அளிக்கப்படும் விருதுகள் மதிப்பு மிக்கவையாக ஹாலிவுட் திரையுலகில் கருதப்படுகிறது. இந்த விழாவில் ஏராளமான ஹாலிவுட் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள் மொத்தம் 25 பிரிவுகளில் இந்த விருதுகள் விழாவுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. அதிகபட்சமாக வார்னர் பிரதர்ஸ் தயாரித்த ‘ஜோக்கர்’ திரைப்படம் 11 பரிந்துரைகளையும், தி ஐரிஷ் மேன் மற்றும் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் படங்கள் 10 பரிந்துரைகளையும், சாம் மெண்டிஸ் இயக்கிய ‘1917’ திரைப்படம் 9 பரிந்துரைகளையும் பெற்றிருந்தன. இந்நிலையில், பாஃப்டா விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் முக்கியமான விருதுகளின் பட்டியல் இதோ!

சிறந்த திரைப்படம் – 1917

சிறந்த இயக்குநர் – சாம் மெண்டிஸ் (1917 படத்திற்காக)

சிறந்த நடிகர் – ஜோக்கின் ஃபீனிக்ஸ் (ஜோக்கர் படத்திற்காக)

சிறந்த நடிகை – ரெனீ ஜெல்வேகர் (ஜூடி படத்திற்காக)

சிறந்த துணை நடிகர் – பிராட் பிட் (ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்)

சிறந்த துணை நடிகை – லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)

சிறந்த திரைக்கதை – பாங் ஜூன் ஹோ, ஹான் ஜின் வோன் (பாரசைட்)

சிறந்த தழுவல் திரைக்கதை – டைக்கா வைட்டி (ஜோஜோ ரேபிட்)

சிறந்த பிரிட்டிஷ் படம் – 1917

சிறந்த ஒளிப்பதிவு  – 1917

சிறந்த எடிட்டிங் – ஃபோர்டு வி பெராரி

சிறந்த உடையமைப்பு – லிட்டில் வுமன்

சிறந்த புரொடக்ஷன் டிசைன் – – 1917

சிறந்த இசை – ஜோக்கர்

சிறந்த ஒலியமைப்பு – 1917

சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – 1917

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – க்லாஸ்

சிறந்த நடிகர்,நடிகையர் தேர்வு – ஜோக்கர்

இந்த 73-வது பிரிட்டிஷ் அகாடமி ஃபிலிம் விருதுகள் விழாவில் அதிகபட்சமாக ‘1917’ திரைப்படம் 7 விருதுகளையும், ஜோக்கர் திரைப்படம் 3 விருதுகளையும், பாரசைட்திரைப்படம் 2 விருதுகளையும் வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Bafta awards winners list

Bafta, 1917 film, பாஃப்டா, 1917 திரைப்படம்