விருச்சிக ராசி குருபெயர்ச்சி பலன்கள் (2018-2019)

 

விருச்சிக ராசி குருபெயர்ச்சி பலன்கள் (2018-2019)

துலாம் ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான்  உங்கள் ராசியிலேயே  பெயர்ச்சியாக இருப்பதால் வரக்கூடிய குரு பெயர்ச்சி எவ்வாறான பலன்களை தரும் என்பதை பற்றி இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்.

விருச்சிக ராசிக்கு செவ்வாய் அதிபதியாக இருப்பதால் எந்த ஒரு காரியத்திலும் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். முன்கோபம் இவர்களது உடன் பிறந்த ஒன்றாகும். இந்த ராசியில் பிறந்தவர்கள் பெரும்பான்மையினர் ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகளாக இருப்பார்கள். 

உங்கள் ராசிக்கு 2 மற்றும் 5க்கு அதிபதியான குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் இருந்து கொண்டு பல்வேறு இன்னல்களையும்,துயரங்களையும் கொடுத்துவந்தார். வீண் செலவுகள் மற்றும் தேவை இல்லாத துயரங்களையும் ஏற்படுத்தினார்.

குரு பகவான் வருகின்ற அக்டோபர் மாதம்  4 ஆம் தேதி முதல் ராசியிலேயே சஞ்சரிக்க உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ,பொருளாதார நிலையில் ஏற்றதாழ்வுகள் அசையும் அசையா சொத்துகள் சுபசெலவு ,தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம் .

குரு பகவான் உங்களது ராசியில் இருந்து உங்களது ராசிக்கு 5 ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தினை பார்ப்பதால் ,தாராள பணவரவு ,சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, தொழிலில் முன்னேற்றம் அசையும் அசையா சொத்துக்கள் சேர்க்கை,புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும் .

குரு பகவான் உங்களது ராசியில் இருந்து உங்களது ராசிக்கு 7 ஆம்  இடமான களத்திர ஸ்தானத்தினை பார்ப்பதால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். திருமணம் கைகூடும் .குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

குரு பகவான் உங்களது ராசியில் இருந்து உங்களது ராசிக்கு  9 ஆம் இடம் ஆகிய பாக்கிய ஸ்தானத்தினை பார்ப்பதால் தந்தை வழி உறவுகளால் மிகுந்த நன்மை உண்டாகும் . தொழிலில் லாபம் அதிகரிக்கும் . எடுத்த அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். 

virchikam manavargal
மாணவர்கள்:  
விருச்சிக ராசி மாணவர்களுக்கு புகழும் கீர்த்தியும் உண்டாகும் . மாணவர்கள் படிப்பில் தேர்ச்சி சதவிகிதம் அதிகமாகும். கல்வி கடன் மற்றும் அரசாங்க உதவிகள் கிடைக்கும்.

virchikam pengal

பெண்கள்: விருச்சிக ராசி பெண்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். புத்திர பாக்கியம் உண்டாகும்.  

virchikam kaaingarkal

கலைஞர்கள்: விருச்சிக ராசி கலைத் துறையினருக்கு உடல் உழைப்பு அதிகமாகவும்,வருமானம் குறைவாகவும் இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் நிதானமாக செயல்படுவது மிகுந்த நன்மை பயக்கும். பொருளாதாரத்தில் தேக்க நிலை உருவாகும்.

virchikam arasiyal

 அரசியல்வாதிகள்:  விருச்சிக ராசி அரசியல்வாதிகள் மிகவும் நிதானம், மற்றும் பொறுமையை கடைபிடிப்பது உத்தமம். கூட்டனி கட்சியை தேர்வு செய்வதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

virchikam vivasayam

விவசாயிகள்: விருச்சிக ராசி விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழிலில் அதிக முதலிடுகளை தவிர்ப்பது நன்மை உண்டாக்கும். விவசாயத்திற்கு தேவையான நீர் பாசன வசதிகள் கிடைக்கும். விவசாய கடன் ரத்தாவது கால தாமதமாகும்.

virchikam parikaram

பரிகாரம்: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் திங்கள் கிழமையில் திருவண்ணாமலை சென்று கிரிவலம் வருவதால் நினைத்த காரியம் கை கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.