விராட் கோஹ்லியை போல அழகாக ‘கரு கரு’ தாடி வளர வேண்டுமா? அப்போ இதையெல்லாம் செய்யுங்க.

 

விராட் கோஹ்லியை போல அழகாக ‘கரு கரு’ தாடி வளர வேண்டுமா? அப்போ இதையெல்லாம் செய்யுங்க.

தாடி-ஆண்களின் அழகை எடுத்துக்காட்டுவது,வழக்கமான ஆண்களைவிட தாடி வைத்திருக்கும் பார்ப்பதற்கு மேன்ன்லியாகத் தெரிவார்கள். அதிலும் சிலருக்கு  தாடி, அதுபாட்டுக்கு காடு மாதிரி வளர்ந்திருக்கும் ; சிலருக்கு ஆட்டுக்கு தாடி வச்ச மாதிரி ஒழுங்காவே வளராது.அவர்களும் என்னென்னவோ முயற்சியெல்லாம் செய்து பார்ப்பார்கள்…

தாடி-ஆண்களின் அழகை எடுத்துக்காட்டுவது,வழக்கமான ஆண்களைவிட தாடி வைத்திருக்கும் பார்ப்பதற்கு மேன்ன்லியாகத் தெரிவார்கள். அதிலும் சிலருக்கு  தாடி, அதுபாட்டுக்கு காடு மாதிரி வளர்ந்திருக்கும் ; சிலருக்கு ஆட்டுக்கு தாடி வச்ச மாதிரி ஒழுங்காவே வளராது.அவர்களும் என்னென்னவோ முயற்சியெல்லாம் செய்து பார்ப்பார்கள்… ஒண்ணும் வேலைக்கு ஆகாது! பொதுவாகவே பெண்களுக்கு தாடி வைத்த ஆண்களை மிகவும் பிடிக்கும் என்பதாலேயே இவர்கள் இவ்வளவு மெனக்கிடுகிறார்கள்! தாடி வளரவே வளராத ஆண்களின் நிலை ரொம்ப பரிதாபம் தான்! இதனால் சிலருக்கு காதலும் கைவிட்டுப்போயிருக்கும். காதல் தோல்விக்காததானே ஆண்கள் தாடி வளர்ப்பாங்க என்று குறுக்கே புகுந்து கேள்வி கேட்பவராக இருந்தால் ; ஸாரி ப்ரோ,நீங்க கண்டிப்பா நைன்டீஸ் கிட்ஸ்ஸாதான் இருக்கணும்.இது உங்களுக்கானது அல்ல! சரி தாடி வளர்ப்பதற்கு சில டிப்ஸ் இதோ,

virat-beard-01

1.தாடி vs சுடு தண்ணீர்:

குளிர்காலத்தில் சுடு தண்ணீரில் குளிக்கும் சுகமே தனிதான் இருப்பினும் உங்கள் தாடிக்கு அது சரிப்பட்டு வராது.எவ்வளவு கடுமையான குளிராக இருந்தாலும் சரி சுடு  தண்ணீரில் குளிப்பது உங்கள் தாடிக்கு ஒரு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.சுடு தண்ணீர் உங்கள் தாடியின் ஈரப்பதத்தை எடுத்து வறட்சியாக்கும். இதனால் தாடிக்கு இயற்கையாக கிடைக்க வேண்டிய  எண்ணெய்கள் கிடைக்காமல் சருமம் அநியாயத்துக்கு வறண்டு அரிப்பை உண்டாக்கும்.

2.சரியாக மொய்ஸ்டரைஸ் செய்தல்:

moisterize-beard

உங்கள் தாடியை நன்கு சுத்தம் செய்தல் அவசியம். ஷாம்பு உபயோகத்தை நிறுத்த வேண்டும். இது உங்கள் தாடியை டீ ஹைட்ரெட் செய்து ஜீவற்றதாகக்கிவிடும்.நல்ல பிராண்டட் கண்டிஷனர் உபயோகிப்பது உங்கள் தாடிக்கு மிகவும் நல்லது.

3.நன்கு சீவுதல்:

comb-beard

உங்கள் தாடியினை நன்கு பராமரிக்க விரும்பினால் நன்கு சீவி பார்த்துக்கொள்ளுங்கள், இது உங்கள் தாடியில் எண்ணெய் ஓட்டத்தை சீராக்குவதோடு சுத்தமாகவும் வைத்துக்கொள்ள உதவும்.இது உங்கள் தாடியின் வளர்ச்சிக்கு வித்திடும்.

4.சலூனுக்கு செல்லுதல்:

beard

நீங்கள் நீண்ட தடியினை வளர்க்கவிரும்பினால் நீங்கள் சலூனுக்கு சென்று தாடியை நன்கு அழகுபடுத்திகொள்ளலாம்.உங்கள் ஸ்டைலிஸ்ட் உங்கள் முக அமைப்பை பொறுத்து நல்ல வடிவத்தை ஏற்படுத்திக் கொடுப்பார்.இது உங்களுக்கும் உங்கள் தாடிக்கும் ஒரு புது லுக்கை தரும்.

செழிப்பா உங்க தாடி நல்லா வளர இதையெல்லாம் சரியாக பின்பற்றுங்க நீக்க விரும்புற தாடியை ஸ்டைலா வெச்சுக்கோங்க!