விராட்-அனுஷ்கா முதலாண்டு திருமண நாள் கொண்டாட்டம்: வைரலாகும் புகைப்படங்கள்!

 

விராட்-அனுஷ்கா முதலாண்டு திருமண நாள் கொண்டாட்டம்: வைரலாகும் புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர்.

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சுமார் 4 ஆண்டுகளாக காதலித்து, கடந்த ஆண்டு டிச.11ம் தேதி இத்தாலி நாட்டின் மிலன் நகர் அருகே டஸ்கேனி எனும் இடத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதனால், விராட் கோலி தனது மனைவியுடன் ஆஸ்திரேலியாவில் தனது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகிறார்.

முதலாம் திருமண நாளை முன்னிட்டு ட்விட்டரில் தனது மனைவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த விராட், சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அவரது ட்வீட்டில், ’ஒராண்டு முடிந்ததை நம்ப முடியவில்லை. நேற்றைக்கு தான் திருமணமானது போல் உள்ளது. நேரம் உண்மையில் வேகமாகச் செல்கிறது. திருமண நாள் வாழ்த்துக்கள் என் உயிர்த் தோழி.. காதலி அனுஷ்கா’ என்று பகிர்ந்துள்ளார்.

இதேபோல், நடிகை அனுஷ்காவும், ’நீங்கள் ஒரு நல்ல மனிதரைத் திருமணம் செய்யும்போது இது சொர்க்கம்எனப் பதிவிட்டுள்ளார். இருவருக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.