விராட்கோலியின் வெறித்தனத்திற்கு… சரணடைந்த விண்டீஸ்!

விராட்கோலியின் வெறித்தனத்திற்கு… சரணடைந்த விண்டீஸ்!

முதல் டி20 போட்டியில் விராட் கோலியின் அதிரடியால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் விண்டீஸ் அணியை வீழ்த்தியது.

இந்தியா மற்றும் விண்டீஸ் அணிகள் மோதிய முதல் டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ind vs wi

விண்டீஸ் அணியின் துவக்க வீரர் லீவிஸ் இந்திய பந்து வீச்சை பறக்க செய்து 17 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிம்மன்ஸ் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அடுத்து வந்த பிரண்டன் கிங் மற்றும் ஹெட்மையர் இருவரும் நன்கு ஆடினர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. கிங் 31 ரன்களுக்கும், ஹெட்மையர் 56 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் பொல்லார்ட் 19 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். 

virat kholi

ஹோல்டர் 9 பந்துகளை மட்டுமே பிடித்து 24 ரன்கள் அடிக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் விண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு
207 ரன்கள் குவித்தது. 

இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் விண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 

அதிரடியாக ஆடி வந்த கேஎல் ராகுல் அரைசதம் கடந்த பிறகு 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் தனது பங்கிற்கு இரண்டு சிக்சர்கள் விளாசி விட்டு 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

virat

இறுதி வரை ஆட்டமிழக்காமல் விண்டீஸ் பந்துவீச்சை துவம்சம் செய்த விராட் கோலி 50 பந்துகளில் 94 ரன்கள் அடித்து இந்திய அணியை இமாலய இலக்கை நோக்கி எடுத்துச் சென்று வெற்றி பெறச் செய்தார்.

இறுதியாக இந்திய அணி 18.4 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக கேப்டன் விராட் கோலி தெரிவு செய்யப்பட்டார்.