வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு செய்வதால் யாருக்கெல்லாம் நன்மை உண்டாகும்

 

வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு செய்வதால் யாருக்கெல்லாம் நன்மை உண்டாகும்

வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு எந்தெந்த ராசி மற்றும் எந்தெந்த லக்னம் மற்றும் எந்த நட்சத்திரகாரர்களுக்கு நன்மை தரும் என்பதினை பற்றி விரிவாக பார்போம்.

மனிதர்கள் சிவனை வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம் ஆகும் . ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின்னும் பௌர்ணமிக்குப் பின்னும் என்று இரண்டு பிரதோஷ நாட்கள் சிவனை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்கள் ஆகும் .

siva

சிவாலயங்களில் இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ நேரம் ஆகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம்.

சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.

siva

இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை.

நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். அந்த குருவருள் இருந்தால் தான் நமக்கு திருவருள் கிடைக்கும். குரு பார்க்க கோடி நன்மை என்பது ஜோதிட பழமொழியாகும்.  

siva

தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும் அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

அதேபோல் குரு திசை நடப்பவர்கள்,குரு புத்தி, குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் மற்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரகாரர்களும் தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களும்

siva

சிவாலயங்களில் வியாழக்கிழமைகளில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சிவனை வழிபாடு செய்வதால் அவர்களது வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கும் என்று பல்வேறு ஜோதிட கிரந்தங்களில் குறிப்பிட்டுள்ளது.