வியாபார பொருட்களை சாலையில் தூக்கி எறிந்து அராஜகம் செய்த அதிகாரி : வைரல் வீடியோ!

 

வியாபார பொருட்களை சாலையில் தூக்கி எறிந்து அராஜகம் செய்த அதிகாரி : வைரல் வீடியோ!

இதனால் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்துள்ளனர்.  

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று  புதிதாக 716 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8718ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.  இதனால் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்துள்ளனர்.  

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில் சாலையோர வியாபாரிகள் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களை எட்டி உதைத்தும் சாலையில் தூக்கி வீசியும் அராஜக செயலில் ஈடுப்பட்டார். இதற்கான வீடியோ இணையத்தில் வெளியாகி கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

This is Cecil Thomas, the Vaniyambadi Municipal Commissioner, in action in north TN. Under which provision of law can shops be vandalised by an official? The law only allows confiscation by due process. @CMOTamilNadu https://t.co/09O7peoZvw

— D Suresh Kumar (@dsureshkumar) May 12, 2020