வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் சலுகைகள் அறிவிப்பு!

 

வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் சலுகைகள் அறிவிப்பு!

குறிப்பாக விவசாயிகளும், வியாபாரிகளும் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விவசாயிகளும், வியாபாரிகளும் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய மாவட்ட, மாநில அளவிலான தொலைபேசி எண்களையும், பொருட்களை சேமித்து வைக்கும் குளிர்பதன கிடங்குகளுக்கு இந்த மாத இறுதி வரை கட்டணம் செலுத்த படாது என்றும் அறிவித்துள்ளது.

ttn

 மேலும், விளைபொருட்களை விற்பனை செய்யும் உழவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் கடன் கொடுக்கப்படும் என்றும் இந்த மாத இறுதி வரை வியாபாரிகள் சந்தை கட்டணத்தை செலுத்த வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவுப்பு, இந்த இக்கட்டான சூழலில் வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் பேருதவியாக இருக்கும்.