வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்!!

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்!!

வியட்நாம் ஓபன் பேட்மின்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் சர்மா சீன வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

வியட்நாமில் உள்ள ஹோசிமின் சிட்டியில் வியட்நாம் ஓபன் பிடபிள்யூஎப் டூர் சூப்பர் 100 பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சவுரவ் சர்மா அபாரமாக ஆடி இறுதிப் போட்டி வரை முன்னேறினார். இறுதிப் போட்டியில் சீன வீரரான சுன் பெய் ஜியங்கை எதிர்கொண்டார்.

sourabh sharma

விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில் முதல் செட்டில் சர்மா 21-12 என சீன வீரரை எளிதாக வீழ்த்தி முன்னிலை பெற்றார். ஆனால் இரண்டாவது சுற்றில் கணித்து ஆடிய சீன வீரர் சுன் பெய் ஜியங் 21-17 என சவுரவ் சர்மாவை வீழ்த்தி சமன் செய்தார். 

மூன்றாவது சுற்றில் அதிரடியாக ஆடத் துவங்கிய சர்மா சீன வீரரை துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 21-14 என இறுதிப் போட்டியை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.

இந்த ஆண்டு பேட்மிட்டன் தொடர்களில் சர்மா வெல்லும் மூன்றாவது சாம்பியன் பட்டம் இதுவாகும். இதற்கு முன்னர் ஹைதராபாத் ஓபன், ஸ்லோவேனியன் ஓபன் என இரண்டு தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 

sourabh

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரை வென்ற பிறகு பேசிய சர்மா கூறியதாவது, இறுதிப்போட்டி சற்று கடினமாக இருந்தது. வென்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். முதல் மூன்று சுற்றுகளில் கடினமான வீரர்களை எதிர்கொண்டது இறுதிப்போட்டியில் என்னை மேலும் பலமான வீரனாக மாற்றியது. அடுத்து வரும் தொடர்களிலும் இந்தியாவிற்காக சாம்பியன் பட்டம் வெல்ல காத்திருக்கிறேன் என்றார்.