வியட்நாமில் மார்ஷியல் கலை கற்கும் அருண் விஜய்!

 

வியட்நாமில் மார்ஷியல் கலை கற்கும் அருண் விஜய்!

‘பாக்ஸர்’ திரைப்படத்துக்காக பிரத்யேகமாக வியட்நாம் நாட்டில் மார்ஷியல் கலைகளை நடிகர் அருண் விஜய் பயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பாக்ஸர்’ திரைப்படத்துக்காக பிரத்யேகமாக வியட்நாம் நாட்டில் மார்ஷியல் கலைகளை நடிகர் அருண் விஜய் பயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஃபிட்னஸ் ஃபிரீக்காக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அருண் விஜய். இவரது பிசிக்கிற்கென ரசிகர்கள் ஏராளம். மிரட்டலான வில்லனாக தல அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த விக்டர் என்றால் தெரியாதவர்களே கிடையாது எனலாம்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படத்திலும் இவரது பிசிச்கை ஹைலைட்படுத்தும் விதமாக இடம்பெற்ற ‘ஹயாட்டி’ என்ற பாடல் படு ஃபேமஸ். இதைத் தொடர்ந்து புதிதாக ‘பாக்ஸர்’ என்ற படத்தில் அருண் விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் மார்ச் மாதம் முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்காக வியட்நாம் நாட்டில் சிறப்பாக மார்ஷியல் கலை மற்றும் பாக்ஸிங் நுணுக்கங்களை பயின்று வருகிறார் அருண் விஜய். மேலும், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னிடமும் அருண் விஜய் சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வருகிறார் எனவும் கூறப்படுகிறது.