விமெல், சற்குணம், சிங்காரவேலன் வகையறாவுக்குள் நடக்கும் கட்டப்பஞ்சாயத்து… யார்தாங்க ஒரிஜினல் களவாணி?

 

விமெல், சற்குணம், சிங்காரவேலன் வகையறாவுக்குள் நடக்கும் கட்டப்பஞ்சாயத்து… யார்தாங்க ஒரிஜினல் களவாணி?

கடந்த இருவாரங்களாக ‘களவாணி 2’ படம் தொடர்பாக நடந்துவரும் பஞ்சாயத்துகளால் படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் யார் நிரபராதி யார் களவாணி என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த இருவாரங்களாக ‘களவாணி 2’ படம் தொடர்பாக நடந்துவரும் பஞ்சாயத்துகளால் படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் யார் நிரபராதி யார் களவாணி என்ற கேள்வி எழுந்துள்ளது.

விமல், ஓவியா நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘களவாணி’. இந்த நிலையில் தற்போது அதே கூட்டணியில் ‘களவாணி-2’ படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் மூலம் ஆறு வார இடைக்காலத் தடை பெற்றுள்ளார்.

kalavani 2

இதுகுறித்து படத்தின் இயக்குனர் சற்குணம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் இந்த படத்தை தான் தயாரித்துள்ளதாகவும், இயக்குனர் விமலுக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் இடையே உள்ள பணப்பிரச்சினை தொடர்பாக, ‘களவாணி-2’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சிங்கார வேலன் இடைக்கால தடை வாங்கி உள்ளார் என்றும் குற்றம் சாட்டி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

kalavani 2

ஆனால் உண்மையில் இது தன்னுடைய பணத்தில் தயாரிக்கப்பட்டது என்றும் விமலும் இயக்குநர் சற்குணமும் களவாணித்தனம் செய்கிறார்கள் என்கிறார்விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமெல் நடித்த ‘மன்னர் வகையறா’ படத்துக்கு ஃபைனான்ஸ் செய்த வகையில் இன்றைய தேதி வரையில் விமல் எனக்கு 4.32 கோடி  ரூபாய் தரவேண்டி இருக்கிறது. ஆறு மாதத்திற்குள் அந்த தொகையை தந்து விடுவதாக விமல் கூறினார். ஆனால் கூறியபடி பணத்தை அவர் தரவில்லை. இந்தநிலையில் தான் களவாணி-2 படம் ‘வர்மன்ஸ்  புரொடக்சன்ஸ்’ சார்பில் தயாராகி வருவதாக அறிவிப்பு வெளியானது. நான் இயக்குனர் சற்குணத்திடமும் விமலிடமும் ஏற்கனவே காப்பிரைட் அடிப்படையில் இந்த படத்தை எடுத்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்கள் என்றும் அதை மீறி இவ்வாறு விளம்பரப்படுத்துவது முறை அல்ல என்றும் பல முறை கூறியும் அவர்கள் இருவரும் அதை காதில் போட்டு கொள்ளவே மறுத்துவிட்டார்கள்.

mannar vagayar

இந்த படத்தின் உரிமை எங்களிடம் தான் இருக்கிறது.. இயக்குனர் சற்குணம் இந்த படத்தை அவர் தயாரித்ததாக சொல்வது சுத்தமான பொய். என் பணத்தில் ஆரம்பிக்கப்பட்டு, ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் இயக்குனர் சற்குணமும் நடிகர் விமலும் சேர்ந்து திட்டமிட்டு நடத்திய நாடகம் என்று தான் நான் இதைக் கருதுகிறேன்’என்கிறார் சிங்காரவேலன்.

இதையும் படிங்க: அள்ளுங்கண்ணே அள்ளுங்க’…நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சியின் வீட்டில் 41 பவுன் நகை அபேஸ்…