விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ஒரு கோடி – போயிங் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ஒரு கோடி – போயிங் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!

போயிங் நிறுவனத்தின் விமானம் விபத்துக்குள்ளானதில் 346 பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பயணிகள் ரக விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தின் விமானங்கள் கடந்த ஐந்து மாதத்திற்குள் இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியா என அடுத்தடுத்து இரண்டு முறை விபத்துக்குள்ளானது. இதனால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

boeing airplane

இந்தோனேஷியா விபத்தில் 189 பேரும் எத்தியோப்பியாவில் நடந்த விமான விபத்தில் 157 பேரும் உயிரிழந்துள்ளனர். ‘போயிங் 737 மேக்ஸ்’ ரக விமானங்கள் இந்த இரண்டு விபத்தின்போதும் பயன்பாட்டில் இருந்துள்ளது. இதனால் இத்தகைய ரக விமானங்களை பயன்பாட்டில் இருந்து உடனடியாக நிறுத்தும்படி போயிங் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. 

மேலும், இந்த விபத்தில் போயிங் விமானத்தின் பாதுகாப்பில் அலட்சியம் இருந்ததே காரணம். இதனால் உயிரை இழந்தோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உலகமெங்கிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் இந்நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்டன. சுமார் ஒரு பில்லியன் வரை இழப்பீடாக ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி சுமார் 7000 கோடி ஆகும்.

இந்நிலையில், போயிங் நிறுவனம் சுமார் 353 கோடி ரூபாய் இழப்பீடாக ஒதுக்கீடு செய்து, விமான விபத்தில் இறந்த 346 பேருக்கும் தலா ஒரு கோடியே இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க முடிவு செய்துள்ளது. அமெரிக்க மதிப்பின்படி ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 500 டாலர் இழப்பீடு வழங்கப்பட இருக்கிறது. 

plane crash

அமெரிக்கா உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த விபத்தில் பலியாகி இருக்கின்றனர். அவர்களுக்கு சேர வேண்டிய இழப்பீடு உரிய நேரத்தில் வழங்கப்படும். இதனை அவர்கள் குடும்பத்தார் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் போயிங் நிறுவனம் குறிப்பிட்டது.

இந்த இழப்பீடு போதாது என்றும், ஒரு பில்லியன் டாலர் அளவிலான இழப்பீட்டை 346 பேரின் குடும்பத்திற்கும் வழங்கவேண்டும் என்றும் மீண்டும் வழக்குகள் தோடுக்கப்பட்டுள்ளது.